தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்து… சிவகாசி அருகே 5 பேர் பலி!

பட்டாசு ஆலை வெடிவிபத்து
பட்டாசு ஆலை வெடிவிபத்து
Published on

சிவகாசி அருகே உள்ள சின்ன காமன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் பலரும் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து மளமளவென எரிந்துகொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.

இந்த வெடி விபத்தின் போது தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த ஜூன் 11ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த வடகரையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com