ஜி.கே. மணியை சந்தித்து நலம் விசாரித்த ராமதாஸ், செல்வப்பெருந்தகை!

ஜி.கே. மணியை சந்தித்து நலம் விசாரித்த ராமதாஸ், செல்வப்பெருந்தகை!
Published on

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான ஜி.கே. மணி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் (ஜூன் 18) அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜி.கே. மணியை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

ஜி.கே.மணியிடம் நலம் விசாரிக்கும் செல்வப்பெருந்தகை
ஜி.கே.மணியிடம் நலம் விசாரிக்கும் செல்வப்பெருந்தகை

அதேபோல், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையும் இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார்.

சேலம் மேற்கு தொகுதியின் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருளும் நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com