‘கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்…’ – கடைசி போட்டியில் மனம் திறந்த தோனி!

எம்.எஸ். தோனி
எம்.எஸ். தோனி
Published on

16 ஆண்டுகளாக சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனி தனது உடல்நிலை குறித்து பேசியுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி அகமதாபாத்தில் நடந்தது. சென்னை அணியின் கடைசி லீக் போட்டி என்பதால் தோனி என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. தோனிதான் டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அப்போது, தன்னுடைய உடல்நிலை குறித்து பேசிய தோனி, “நாங்கள் முதலில் பேட் செய்யப்போகிறோம். மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது.

என்னுடைய உடல்நிலையைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் எனக்குப் பெரிய சவாலாகத்தான் இருக்கிறது. அதுவும் கரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்கும்போது உடல்நிலையைப் பேணுவது ரொம்பவே முக்கியமானது.

அணியின் பயிற்சியாளர் குழு இதில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. நான் இப்போது வரை சர்வைவ் ஆகிவிட்டேன். சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும்போது எனது உடல்நிலையில் பெரிதாகப் பிரச்னைகள் இருந்ததில்லை. அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com