இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்

இந்திய அணி வீரர்கள் தங்களது சாதி பெயரை கைவிட பி.சி.சி.ஐ. வலியுறுத்த வேண்டும்! – கார்த்தி சிதம்பரம்

இந்திய அணி வீரர்கள் தங்களது சாதி பெயரை கைவிட இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியர்கள் தங்களது பெயருடன் சாதி பெயரையும் சேர்த்துக் கொள்வது வழக்கம். அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களும் தங்களின் பெயருடன் சாதி பெயரை சேர்த்துக் கொண்டுள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பெயருடன் சாதிப் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில், “இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது சாதி பெயரை கைவிட இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com