
பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது ராகுல் காந்தியின் பிரச்சாரம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகள் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதேபோல், கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 19 இடங்களே வென்றது.
இந்நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள 2025ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 61 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது.
இன்று காலை தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
காலை 10மணி நிலவரப்படி தனிப்பெரும் கட்சியாக ஜேடியூவும் பாஜகவும் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றன. ஆர்ஜேடி தற்போது 3ஆவது இடத்தில் உள்ளது. லோக் ஜனசக்தி கட்சி 18 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் காங்கிரஸ் வெறும் 7 இடங்களில் முன்னிலை பெற்று 5 ஆவது இடத்தில் உள்ளது. இதன் மூலம் ராகுலில் தேர்தல் பிரச்சாரம் பெரிதாக எடுபடவில்லை என்பது வாக்கு எண்ணிக்கை நிலவரம் காட்டுகிறது.