இந்தியா

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மேலே கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் திடீரெனப் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயில் சன்னிதானத்தின் மீது ஹெலிகாப்டர் தாழப் பறந்ததால், பாதுகாப்பு விதி மீறப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வழக்கும் பதியப்பட்டுள்ளது.
கடலோரக் காவல் படை இதுகுறித்து விளக்கம் அளிக்கையில், வானிலை மோசமடைந்த காரணத்தால் ஹெலிகாப்டரின் பாதை திருப்பிவிடப்பட்டது என்று அதனால் இது நேரிட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும் காவல்துறையின் வழக்கை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.