இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

மீறல் பேச்சு- மோடி, இராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

மக்களவைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறிப் பேசியதாக பிரதமர் மோடி மீதும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி மீதும் புகார்கள் கூறப்பட்டன. இதில் பிரதமர் மோடி முஸ்லிம்கள் தொடர்பாக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக நாடளவில் பெரும் கண்டனங்கள் எழுந்தன. தில்லி காவல்துறையிடம் இதுகுறித்து புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன. 

தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், தேர்தல் ஆணையம் அமைதியாக இருந்துவந்தது. 

இந்த நிலையில் இராகுல் மீது பா.ஜ.க. தரப்பில் புகார் கூறப்பட்டதை அடுத்து, மோடி, இராகுல் இருவருக்கும் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

வரும் 29ஆம் தேதிக்குள் இருவரும் தத்தம் விளக்கங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என சற்றுமுன்னர் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com