வி.கே.பாண்டியன்
வி.கே.பாண்டியன்

ஐ ஆம் சாரி - அரசியலிலிருந்து விலகிய வி.கே.பாண்டியன்!

தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்திருப்பது, ஒடிசா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய நாள்களில் ஒடிசா மாநில அரசியலில் அதிகம் அடிப்பட்ட பெயர் வி.கே. பாண்டியன். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜூ ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது. இதற்குக் காரணம் வி.கே. பாண்டியன் என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், ”வி.கே.பாண்டியனைக் குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது” என நவீன் பட்நாயக் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று வீடியோ ஒன்றை வெளியிட்ட வி.கே.பாண்டியன், தான் தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது. “நவீன் பட்நாயக்கிற்கு உதவவே அரசியலுக்கு வந்தேன். பதவிக்காகவோ, பொறுப்புக்காகவோ அரசியலுக்கு வரவில்லை. எனக்கு எதிரான பரப்புரை பிஜு ஜனதா தளத்தின் வெற்றியை பாதித்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அரசியல் முழுமையாக ஓய்வு பெற்றுக் கொள்கிறேன்” என வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com