இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, ஜப்பானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
ஜப்பானில் நடைபெற்ற இந்தப் போட்டி, மழை காரணமாக திட்டமிட்டு இருந்த நேரத்தில் நடத்த முடியாததால், 20 ஓவர்களில் இருந்து 5 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன.
டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணி 5 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாகக் களம் இறங்கிய ஜப்பான் அணி, தொடக்கத்தில் நன்றாக பேட்டிங் செய்தது. கடைசி ஓவரில் இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தரின் அட்டகாசமான பந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார்.
இதன் மூலம் சர்வதேசப் போட்டிகளில், இந்திய அணி தனது 200-ஆவது வெற்றியைப் படைத்துள்ளது.