SIR: நீக்கப்பட்ட தலைமை தேர்தல் அதிகாரி பெயர்!

கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர்
கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர்
Published on

கேரளாவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படட நிலையில், அதில் அம்மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் பெயரே இடம் பெறாதது விவாதமானது. இதையடுத்து எஸ்ஐஆர் தொடர்பான விசாரணையில் அவரே நேரில் ஆஜராகி தேவையான ஆவணங்களைக் கொடுத்தார்.

பீகாரை தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், கேரளாவில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், அம்மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் பெயர் இடம்பெறவில்லை. கேல்கர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை. 2002 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் கேல்கர் பெயர் இடம்பெறாத பெறவில்லை.

இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் நடந்த எஸ்ஐஆர் தொடர்பான விசாரணையில் அவரே நேரில் ஆஜரானார். வாக்காளர்களுக்குச் சம்மன் அனுப்பப்படுவது குறித்து விவாதம் எழுந்துள்ள நிலையில், தேர்தல் அதிகாரிக்கே சம்மன் அனுப்பப்பட்டு இருந்ததும் அவர் நேரில் ஆஜரானதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com