உருக்கும் படங்கள்- வயநாடு பகுதியில் தமிழக காங்கிரசார்!

wayanadu landslide tncc team witnessed
வயநாடு பாதிப்பைப் பார்வையிட்ட தமிழக காங்கிரஸ் குழுவினர்
Published on: 

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த பெரும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று நேரில் சென்று பார்த்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு உட்பட்ட நிர்வாகிகள் நிவாரணப் பொருட்களையும் வழங்கினர். 

வயநாடு, சூசிபுரா, காக்காவயல் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அடிப்படைத் தேவைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, கல்பெட்டா காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அந்த மாநிலத்தின் வட்டார நிர்வாகிகளுடன் தமிழகக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

நிலச்சரிவும் வெள்ளமும் ஏற்பட்ட இடங்களையும் தமிழக காங்கிரஸ் குழுவினர் வாகனங்களில் சென்று பார்வையிட்டனர். அங்குள்ளவர்களிடம் சேத விவரம் குறித்து கேட்டறிந்தனர். 

தமிழக காங்கிரஸ் வெளியிட்ட பாதிப்புப் படங்கள் மனதை உருக்குபவையாக உள்ளன.

tncc team visiting wayanadu landslide 1
தமிழக காங்கிரஸ் குழு பார்வையிட்ட வயநாடு நிலச்சரிவுக் காட்சி 1
tncc team visiting wayanadu landslide 2
தமிழக காங்கிரஸ் குழு பார்வையிட்ட வயநாடு நிலச்சரிவுக் காட்சி 2
tncc team visiting wayanadu landslide 3
தமிழக காங்கிரஸ் குழு பார்வையிட்ட வயநாடு நிலச்சரிவுக் காட்சி 3

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com