இந்திய ராணுவத்துக்கு ரஜினிகாந்த் பாராட்டு!

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்
Published on

பாகிஸ்தானிற்குள் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் செல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் இன்று வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானிற்குள் நுழைந்து அங்கிருந்த பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு பாராட்டுகள்.

போரை திறமையாக, வலிமையாக கையாண்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள், நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இதன் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்ற நிலையில் தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com