ஃபாலோ ஆனை தவிர்த்த இந்திய அணி… ஓய்வறையில் துள்ளிக் குதித்த கம்பீர்! அப்ப டிரா பண்ணிடுவீங்களா?

Bumraa and Akash deep
பாலோ ஆன் தவிர்த்த பும்ராவும் ஆகாஷ் தீப்பும்
Published on

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் பும்ரா, ஆகாஷ் தீப் இருவரின் ஆட்டத்தால் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்து தப்பிப் பிழைத்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445க்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் முக்கிய ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் நான்காம் நாளான இன்று கே.எல்.ராகுல் - ஜடேஜா சிறப்பாக விளையாடினார்கள். ராகுல் 84 ரன்களுக்கும் ஜடேஜா 77 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இதனால் இந்திய அணி 213 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க வேண்டுமென்றால், 33 ரன்கள் சேர்க்க வேண்டிய நிலையிலிருந்தது.

அப்போது கடை நிலை வீரர்களான பும்ரா - ஆகாஷ் தீப் இருவரும் இணைந்து நிதானமாக ஆடி ஃபாலோ ஆனை தவிர்த்தனர். இதனால் ஓய்வறையில் இருந்த கம்பீர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். இதன்பின் ஆகாஷ் தீப் அபாரமாக விளையாடி சிக்சரை விளாச, தொடர்ந்து போதுமான வெளிச்சம் இல்லாததால், ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதனால் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்களுடன் களத்தில் உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com