பா.ஜ.க.2ஆவது வேட்பாளர் பட்டியல்
பா.ஜ.க.2ஆவது வேட்பாளர் பட்டியல்

நடிகை ராதிகா விருதுநகர் பா.ஜ.க. வேட்பாளர்- 15 பேர் பட்டியல்!

நடிகை இராதிகாவை விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. 

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சற்றுமுன்னர் 15 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில், புதுவை வேட்பாளராக நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான தேவநாதன், ஜான்பாண்டியன் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர்.   

1. திருவள்ளூர் - பாலகணபதி

2. வட சென்னை - பால் கனகராஜ்

3. திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்

4. நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்

5. திருப்பூர் - ஏ.பி. முருகானந்தம்

6. பொள்ளாச்சி - வசந்தராஜன்

7. கரூர் - வி.வி. செந்தில்நாதன்

8. சிதம்பரம் - கார்த்தியாயினி

9. நாகை - எஸ்.ஜி.எம். ரமேஷ்

10. தஞ்சை - எம். முருகானந்தம்

11. சிவகங்கை - தேவநாதன் யாதவ்

12. மதுரை - இராம சீனிவாசன்

13. விருதுநகர் - ராதிகா சரத்குமார்

14. தென்காசி - ஜான் பாண்டியன்

புதுச்சேரி

15.புதுச்சேரி - நமச்சிவாயம்

இதனிடையே, பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், விளவங்கோடு இடைத்தேர்தலில் வி.எஸ். நந்தினி என்பவர் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com