வெம்பக்கோட்டை அருகே பட்டாசு விபத்து
வெம்பக்கோட்டை அருகே பட்டாசு விபத்து

பட்டாசு ஆலை விபத்து - 4 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகில் பட்டாசு ஆலை ஒன்றில் இன்று விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குண்டாயிருப்பு எனும் ஊரில் விக்னேஷ் என்பவருக்குச் சொந்தமான இந்த ஆலையில், 100 பேர் பணியாற்றிக்கொண்டிருந்த இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  

மருந்துக்கலவை செய்யும்போது உராய்வு ஏற்பட்டு வெடிப்பு நிகழ்ந்தது என்றும் இதில் 5 அறைகள் தரைமட்டம் ஆகியுள்ளன என்றும் கூறப்படுகிறது.

விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com