Chief Minister Stalin was welcomed by actor Napoleon.
முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற நடிகர் நெப்போலியன்

முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற நடிகர் நெப்போலியன்!

Published on

அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினை நடிகர் நெப்போலியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறைப் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதலமைச்சரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் வழியாக நேற்று பிற்பகல் அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு அவருக்கு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, நடிகர் நெப்போலியன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

இதனைத்தொடர்ந்து 31ஆம் தேதி புலம்பெயர்ந்த தமிழர்களை முதலமைச்சர் சந்தித்து பேசுகிறார். செப்டம்பர் 2ஆம் தேதி சான்பிரான்ஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார். அங்கு 10 நாட்கள் முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்க முதலமைச்சர் அழைப்பு விடுகிறார். அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை திரும்ப அவர் திட்டமிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com