ஹ... வாழ்த்துகள்! - ரஜினிகாந்த்

ஹ... வாழ்த்துகள்! - ரஜினிகாந்த்

தமிழக வெற்றி கழகம் தொடங்கியுள்ள விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2ஆம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்கிற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி இல்லை என்றும், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்,ஹைதராபாத் செல்ல சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினி, ”வாழ்த்துக்கள்” என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com