வாக்குச்சாவடிகளில் பொருத்தப்பட வேண்டிய கண்காணிப்பு கேமராக்களைக் குறைக்கக்கூடாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அ.தி.மு.க. கடிதம் அனுப்பியுள்ளது.
”அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குபதிவைக் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது. சில மாவட்டங்களில் இந்த கேமராக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது.
இதன் மூலம் வாக்குசாவடி கைப்பற்றல் கள்ள ஒட்டு போடுதல் உள்ளிட்ட தவறுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தேர்தல் ஆணையம் நேரடியாக தலையிட்டு அனைத்து வாக்கு சாவடிகளிலும் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட கேமராக்கள் குறையாத வண்ணம் அதிரடி ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும்.” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குக்கு அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை எம்.பி. அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார்.