முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பா.ஜ.க. தலைவர்கள் வதந்தி பரப்பும் வாட்ஸ்­அப் யுனிவர்சிட்டிக­ள்! - முதல்வர் விமர்சனம்

பா.ஜ.க. தலைவர்கள் வதந்தி பரப்­பும் வாட்ஸ்­அப் யுனிவர்சிட்டிகளா­க செயல்­படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள மடலில் கூறப்பட்டுள்ளதாவது:

 “சமூ­க­நீ­திக் கொள்கை வழி­யில் பய­ணிக்­கும் மத­நல்­லி­ணக்க மண்­தான் தமிழ்­நாடு என்­பதை சேலத்­தில் எழுச்­சி­யு­டன் நடந்தேறிய கழக இளை­ஞ­ர­ணி­யின் இரண்டா­வது மாநில மாநாடு இந்­திய ஒன்­றி­யத்­தில் உள்ள அனைத்து மாநி­லங்­களுக்­கும் உணர்த்தியி­ருக்­கி­றது.

மாநாட்­டுப் பந்­த­லைக் கடந்து, வளா­கம் நிறைந்து, நெடுஞ்­சாலை முழு­வ­தும் திரண்­டி­ருந்த இளை­ஞர் பட்­டா­ளம், கழ­கத்­தின் எதிர்காலம் குறித்த பெரும் நம்­பிக்­கையை விதைத்­துள்­ளது.

நாடா­ளு­மன்­றத் தேர்­தல் களத்­திற்கு ஆயத்­த­ மாக்­கும் பயிற்சி அரங்க­மாக இளை­ஞ­ர­ணி­யின் மாநாடு அமைந்­தி­ருந்த அதேவேளையில், வெறும் தேர்­தல் அர­சி­யலை மட்­டுமே திரா­விட முன்னேற்றக் கழ­கம் முன்­னெ­டுப்­ப­தில்லை என்­ப­தை­யும், தேர்தல்களத்­திலும் கொள்கை வழி அர­சி­ய­லையே முன்னெடுக்கும் என்­பதை­யும் மாநாட்­டின் மையப் பொரு­ளாக அமைந்த, ‘மாநில உரிமை மீட்பு முழக்­கம்’ நிரூபித்­திருந்­தது.

இரா­மர் கோயில் திறக்­கப்­ப­டும் நாளில், தமிழ்­நாட்­டில் இந்து சமய அற­நி­லை­யத்­து­றை­யின் நிர்­வா­கத்­தின்­கீழ் உள்ள கோயில்­க­ளில் சிறப்புப் பூசை­கள் செய்­வதற்­கும் அன்­ன­தா­னம் வழங்­கு­வ­தற்­கும் தடை விதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அவ­தூறு நிறைந்த பொய்ச் செய்தியை ஊட­கங்­கள் மற்­றும் சமூக ஊட­கங்­கள் வாயி­லா­கப் பரப்பினர். 

மாநாட்டு அரங்­கில் இருந்­தா­லும், தன் துறை­யின் பணி­களை ஒவ்வொரு நொடி­யும் மேற்­கொண்ட செயல்­பாபு எனப்­ப­டும் அமைச்சர் சேகர்­பாபு, உட­ன­டி­யாக இந்த அவ­தூறுப் பரப்­பு­ரைக்கு மறுப்புத் தெரி­வித்து, உண்மை நிலையை விளக்கி அறிக்கை வெளியிட்­டார்.

ஒரு வதந்­தியை வாட்ஸ்­அப், இதர சமூக வலைத்­த­ளங்­கள், தொலைக்­காட்­சி­கள், பத்­தி­ரி­கை­கள் எனப் பர­வச் செய்து அதனை உண்மை போல ஆக்­கும் பணியை, பா.ஜ.க.வில் உயர்ந்த பொறுப்பில் உள்­ள­வர்­களே பொறுப்­பின்றிச் செய்­வதுவழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் தலை­ந­க­ரம் டெல்லி முதல் தமிழ்­நாட்­டில் உள்ள பா.ஜ.க.வினர் வரை யாரும் விதி­வி­லக்கு கிடை­யாது.

காஞ்­சி­பு­ரம் காமாட்­சி­யம்­மன் திருக்­கோ­யி­லில் பஜனை நிகழ்ச்சிகளின் போது காணொலிக் காட்சி ஒளி­ப­ரப்­புக்கு அறநிலையத்­துறை தடை விதித்­தி­ருப்­ப­தா­க­வும் ஒன்­றிய நிதியமைச்ச­ரான நிர்­மலா சீதா­ரா­மன் குறிப்­பிட்­ டிருந்­தார். ஆனால், அந்த பஜனை நிகழ்ச்­சிக்கு அனு­மதி கோரி­ய­வர்­களே, காணொலிக் காட்­சி­கள் எதை­யும் திரை­யி­ட­மாட்­டோம் என்று குறிப்­பிட்­டுதான் அனு­ம­தியே கோரி­யுள்­ள­னர். இதனை மறைத்துவிட்டு, ஒன்­றிய நிதிய­மைச்­சர் பரப்­பிய உண்­மைக்கு மாறான செய்தி அல்ல, திட்டமிடப்­பட்ட வதந்தி, பொழுது விடிவதற்­குள் பொய் என அம்பலமா­னது.

அது­மட்­டு­மல்ல, இந்­தப் பொய்ப் பரப்­பு­ரைக்­குச் சென்னை உயர்நீதிமன்­றமே கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­தை­யும், தமிழ்நாட்டை என்றென்­றும் அமை­திப் பூங்­கா­வா­கத் திக­ழச் செய்யும் மத­நல்லிணக்க எண்­ணம் கொண்ட மக்­கள் கவ­னத்­தில் கொள்ள வேண்டும்.

“பக்தி என்­பது மகிழ்ச்­சிக்­கும் அமை­திக்­கா­ன­தும் மட்­டுமே. சமூகத்தில் நில­வும் சம­நி­லை­யைச் சீர்­கு­லைப்­ப­தற்­காக அல்ல” என்றும், சிறப்பு பூஜை­க­ளுக்கு எந்­தத் தடை­யும் விதிக்­கப்­ப­டாத நிலை­யில், தவ­றான பரப்­பு­ரை­யால் சட்­டம் – ஒழுங்குச் சீர்­கேட்டிற்கு வழி வகுத்­தி­டக்­கூ­டாது என்­றும் உயர்­நீ­தி­மன்­றம் கண்ட­னம் தெரிவித்து எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

அர­சி­யல் சட்­டத்­தையே மதிக்­காத போக்­கு­டன் நடந்­து­கொள்­ளும் பா.ஜ.க.வின் உயர்ந்த பொறுப்­பில் உள்­ள­வர்­க­ளும், பா.ஜ.க.வால் உயர்ந்த பொறுப்­பைப் பெற்­ற­வர்­க­ளும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்­அப் யுனி­வர்­சிட்­டி­க­ளா­கவே செயல்­பட்­டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்­நாட்­டின் ஆளு­ந­ராக நிய­ம­னப் பத­வி­யில் உள்ள ஆர்.என்.ரவியின் அதி­கா­ரப்­பூர்வ சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில், இந்து சமய அற­நி­லை­யத்­துறை நிர்­வா­கத்­தில் சென்னை மேற்கு மாம்­ப­லம் அருள்­மிகு கோதண்­ட­ரா­மர் கோயி­லுக்கு வழி­பாடு செய்­யச் சென்றபோது, பூசா­ரி­கள் மற்­றும் கோயில் ஊழியர்களிடம் கண்ணுக்குப் புலப்­ப­டாத பயம் தெரிந்­த­தா­க­வும், அயோத்தி இரா­மர் கோயி­லில் பால இரா­மர் சிலை நிறு­வப்­ப­டும் நாளில், கோதண்டராமர் கோயில் வளா­கம் கடு­மை­யான அடக்குமுறை உணர்வை வெளிப்­ப­டுத்­து­வ­தா­க­வும் தன் மன­தின் வன்­மத்­தைப் பதிவிட்­டுள்­ளார்.

காமா­லைக் கண்­க­ளுக்­குக் கண்­ட­தெல்­லாம் மஞ்­சள் என்­பார்­களே, அந்த நிலை­யில்­தான் இருக்­கி­றார், தமிழ்­நாட்டு மக்­க­ளின் உணர்வுகளைக் கொஞ்­ச­மும் அறி­யா­மல் தமிழ்­நாட்­டின் ஆளு­நர் பொறுப்­பில் உள்ள மதிப்­பிற்­கு­ரிய ஆர்.என்.ரவி அவர்­கள்.

கோதண்­ட­ரா­மர் திருக்­கோ­யில் அர்ச்­ச­கர்­களே, எவ்­வித பயத்திற்கோ அடக்­கு­முறை உணர்­வுக்கோ இட­மில்லை என்று தெரி­வித்­துள்ள நிலை­யில், ஆளு­நர் அல­று­வ­தற்­குக் கார­ணம் அரசி­ய­லன்றி வேறென்ன இருக்க முடி­யும்!

தமிழ்­நாட்­டில் எந்­தக் கோயி­லி­லும் பக்­தர்­கள் வழி­பாடு நடத்தலாம். தைப்­பூச நாளில் முரு­கன் திருக்­கோ­யில்­களி­லும், சித்­தி­ரைத் திருவிழா­வில் அழ­கர் ஆற்­றில் இறங்­கும்­போ­தும், திருவா­ரூர் ஆழித்தே­ரோட்­டத்­தின்­­போதும், கும்­ப­கோ­ணம் மகாமகம் திரு­விழாவிலும், மயி­லாப்­பூர் கபா­லீ­சு­வ­ரர் திருக்கோயில் அறு­பத்து மூவர் திரு­வீ­தி­யு­லா­வி­லும் ஆயி­ர­மா­யி­ரம் பக்­தர்­கள் உண்­மை­யான பக்­தி­யு­டன் பங்­கேற்­ப­தை­யும், அவர்களுக்குப் பிற மதத்­தி­ன­ரும் ஒத்துழைப்பு அளிப்­ப­தை­யும் சமூ­க­நீ­திக் கொள்கை அடிப்­ப­டை­யி­லான மத­நல்­லி­ணக்க நிலமாகிய தமிழ்­நாட்­டில் காண­மு­டி­யும்.

பா.ஜ.க. தன் தோளில் சுமக்­கும் அயோத்தி இரா­மர் கோயில் அரசியலை, அமை­தி­யான கோதண்­ட­ரா­மர் திருக்­கோ­யி­லில் போய் ஆளு­நர் தேடி­யி­ருக்­கி­றார் என்­றால் அவ­ரி­டம் இருப்­பது பக்தியா, பகல் வேடமா?

தமிழ்­நாட்­டின் உண்­மை­யான பக்­தர்­கள், பக்­தியை தங்­க­ளின் தனிப்பட்ட உரி­மை­யாக, அக­ம­கிழ்­வாக, ஆன்­மத் தேட­லா­கக் கொண்டவர்­கள். அவர்­கள் பெரு­மா­னை­யும் வழி­பா­டு­வார்­கள். பெரியா­ரின் தத்­து­வங்­க­ளை­யும் போற்­று­வார்­கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்­பார்­கள். 

இந்த அமை­தி­யை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் சீர்­கு­லைக்­கும் நோக்கில் பா.ஜ.க.வில் பல நிலை­­களில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படுகி­றார்­கள். அவர்­க­ளின் தலை­யில் குட்டு வைப்­ப­து­போல உயர்­நீ­தி­மன்­றம் கண்­ட­னம் தெரிவித்திருப்பதை வர­வேற்­போம்.

 சேலத்­தில் நடந்த கழக இளை­ஞ­ர­ணி­யின் இரண்­டா­வது மாநில மாநாட்­டின் மகத்­தான வெற்றி கண்டு அல­று­கின்ற கழ­கத்­தின் அரசியல் எதி­ரி­க­ளும், தமிழ்­நாட்­டின் நிரந்­தர எதி­ரி­க­ளும் வதந்திகளைப் பரப்பி திசை­தி­ருப்ப நினைத்­தா­லும், கழக உடன்பிறப்புகள் ஒவ்­வொ­ரு­வ­ரும், வில்­லில் தொடுக்­கப்­பட்ட கணை தனது இலக்கை மட்­டுமே குறி வைப்­ப­து­போலச் செயல்படவேண்டும்.

மாநாட்­டில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னங்­கள், பல்­வேறு தலைப்புக­ளில் நடந்த சொற்­பொ­ழி­வு­க­ளில் சொல்­லப்­பட்­டுள்ள கருத்து­களை முன்­னெ­டுத்து, நாடா­ளு­மன்­றத் தேர்­தல் களத்­தில் மதவெறி பாசிசச் சக்­தி­களை முறி­ய­டிக்­கும் பணியில் முனைப்பாகச் செயல்­ப­டுங்­கள். 

நம் திரா­விட மாடல் கொள்­கையை இந்­தியா முழு­மைக்­கும் கொண்டு செல்­வோம். நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் வெல்­வோம்!” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com