இந்திரகுமாரி
இந்திரகுமாரி

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

முன்னாள் அமைச்சரும், தி.மு.க. இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. தொட்டில் குழந்தை திட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் இவர்.

தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்த இந்திரகுமாரி 2006இல் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். அவருக்கு இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திரகுமாரி (வயது - 73) சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

அவருக்கு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்ட இரங்கல் செய்தி: திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி என்னை சோகத்தில் ஆழ்த்தியது. நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவரான இந்திரகுமாரி தமிழ்நாட்டு அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்கு பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு திமுகவுக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு. புலவர் இந்திரகுமாரியைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தி.மு.க. தொண்டர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com