ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு முதல்வர் ஸ்டாலின் தந்த பரிசு என்ன?

விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு முதலமைச்சர் தந்த நினைவுப் பரிசு
விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு முதலமைச்சர் தந்த நினைவுப் பரிசு
Published on

மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.இரவி, தமிழ்நாட்டுக்குப் புதியவர் நியமிக்கப்படும்வரை கேரள ஆளுநர் அர்லேக்கர் பொறுப்பு ஆளுநராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் மேற்குவங்கத்துக்குச் சென்று பொறுப்பேற்கவுள்ள ஆர்.என்.இரவியை இன்று முற்பகல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார். 

சம்பிரதாயமான இந்தச் சந்திப்பு இருபது நிமிடங்களுக்கு மேல் நீடித்தது எனக் கூறப்படுகிறது. 

முதலமைச்சரை வரவேற்ற இரவி, அவருக்குப் பொன்னாடை அணிவித்தார். 

நமது மாநிலத்தைவிட்டுச் செல்லும் இரவிக்கு முதலமைச்சரும் நினைவுப்பரிசு வழங்கினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com