மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்

‘நீங்கள் நலமா’ – முதல்வர் ஸ்டாலினின் புதிய திட்டம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 6ஆம் தேதி ’நீங்கள் நலமா’ என்ற புதிய திட்டத்தை தொடங்க உள்ளார்.

மயிலாடுதுறையில் ரூ 114. 48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“நாகை மாவட்டத்திலிருந்து புதிய மாவட்டமாக உதயமான மயிலாடுதுறைக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிதி ஒதுக்கி, நிர்வாக ஒப்புதல் வழங்கி, ஒன்றை ஆண்டுக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்திருக்கிறேன். புது மாவட்டங்களை அறிவிப்பது பெரிய விஷயமல்ல; அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித்தருவதுதான் முக்கியம்.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மாவட்டங்களுக்கான உள்கட்டமைப்பு வசதி தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் இந்த நிகழ்வு.

மயிலாடுதுறைக்கு ரூ. 655 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் மக்கள் பயன்பாட்டுக்காக அளிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 12 ஆயிரத்து 653 பயனாளிகளுக்கு 143 கோடியோ 46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.

அறிவிப்புகளை அரசாணைகளாக மாற்றும் அரசு தி.மு.க. அரசு. அரசாணைகளை உரிய முறையில் நடைமுறைக்கு வருவதை உறுதிசெய்யும் அரசு திராவிட மாடல் அரசு.

திருவாரூரில் ரூ. 2.5 கோடியில் உலர் மின் நிலையம் அமைக்கப்படும். முத்துப்பேட்டையில் ரூ. 10 கோடி மதிப்பில் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும்.

புதிய மயிலாடுதுறை நகராட்சி 10 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்படும். அதேபோல், ரூ. 5 கோடி மதிப்பீட்டில் ஒரு நூலகம் கட்டப்படும்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கின்ற வகையில்தான் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

தமிழக அரசின் திட்டங்களின் பயன்கள் மக்களை சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்வதற்கு ’நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை வரும் 6ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க உள்ளேன். நான் உட்பட, அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மக்களை தொடர்பு கொண்டு திட்டங்கள் குறித்து கருத்துக் கேட்கப்போகிறோம். அந்த கருத்துகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நிதி நெருக்கடி அதிகமாக இருக்கின்ற இந்த சூழலில், எந்த மக்கள் நல திட்டங்களையும் நிறுத்தவில்லை. நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் முகத்தைக் காட்டுகிறவர்கள் அல்ல; அப்படிக் காட்டுகிறவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும். தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்போகிறார்கள். அதனால், அடிக்கடி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு நன்மை செய்துவிட்டு அவர் தமிழ்நாட்டுக்கு வரட்டும். ஓட்டுக்காக மட்டுமே அவர் இங்கு வருகிறார். தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட 2 பேரிடர்களுக்கு நிவாரண நிதி கேட்டோம். ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com