முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

போதைப் பொருள் புழக்கம்... அதிகாரிகளுக்கு உத்தரவு போட்ட முதல்வர்!

போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்து, போதை ஒழிப்பு நடவடிக் கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

போதைப்பொருட்கள், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் பரி மாற்றத்தைத் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, நேற்று தலைமைச்செயலகத்தில் முதல்வர்.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாகவும் மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் அமுதா, சுகாதாரத் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி உள்பட பல துறைகளின் செயலர்கள், தமிழக டிஜிபிசங்கர் ஜிவால், கூடுதல் டிஜிபி அருண், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற் றனர்.

அப்போது துறைவாரியாக செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருள் நடமாட்டம், பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com