செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர்
செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர்படம்: நன்றி- ஆர்.செந்தில்குமார்

நிவாரணம்- ஸ்டாலினுக்கு சட்டமன்ற காங். தலைவர் வைத்துள்ள கோரிக்கை!

அரசு அறிவித்துள்ள புயல் நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து இன்று இரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ நிதி ஆதாரம் இல்லாத போதிலும், ஒன்றிய அரசு இதுவரை முழுமையான நிவாரண நிதி வழங்காமல் இருந்த போதும், நிதிநிலை மோசமான சூழ்நிலை இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெள்ள நிவாரண நிதியாக அறிவித்தது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். அதே நேரத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் வட்டார வாரியாக பாதிக்கப்பட்ட தாலூகா அளவில் என்று செய்திகள் உலா வருகின்றன."என்று குறிப்பிட்டுள்ளார்.

”காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் ஒன்றியத்தில் செம்பரம்பாக்கம் ஏரி இருந்தாலும் அதனுடைய ஆரம்பம் திருப்பெரும்புதூர் தாலூகாவிலிருந்து தொடர்கிறது. திருப்பெரும்புதூர் தாலூகாவில் உள்ள கிராமங்களிலிருந்து வரும் தண்ணீர் தான் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரவாகவுள்ளது.” எனச் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,

”காஞ்சிபுரம் மாவட்டத்தில் (தனி) தொகுதியாக திருப்பெரும்புதூர் தொகுதி மட்டுமே உள்ளது. அதில் திருப்பெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுக்காக்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாமான்ய மக்கள், விவசாயிகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் பெரும்பாலோனோர் வசித்து வருகின்றனர். எனவே, பாதிக்கப்பட்டுள்ள திரும்பெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலூகாவில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழுமையாக மாண்புமிகு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கவேண்டும்.”என்றும் செல்வப்பெருந்தகை தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com