அமெரிக்கப் பயணத்துக்குப்பின் முதல் நிகழ்வு- அண்ணாவுக்கு முதல்வர் மரியாதை!

anna arivalayam glittering with Iluminating lights
வண்ண விளக்குகளால் மிளிரும் அண்ணா அறிவாலயம்
Published on: 

அமெரிக்கப் பயணம் முடிந்து நேற்று தமிழகத்துக்குத் திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், இன்று முதல் நாளாக அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று சென்னை, அண்ணா சாலையில் உள்ள அவரின் சிலைக்கு காலையில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், மலர் மரியாதை செலுத்தினார். 

அவருடன் துரைமுருகன் முதலிய மூத்த அமைச்சர்கள், அமைச்சர் உதயநிதி, சென்னை மேயர் பிரியா உட்பட பலரும் மரியாதை செலுத்தினர். 

CM Stalin flower tributes to former CM leader Anna in Chennai, Anna road
அண்ணா 116ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் மரியாதை

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. வழக்கம்போல முப்பெரும் விழாவைக் கொண்டாடுகிறது. இதையொட்டி தி.மு.க.வின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் நேற்று வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு, வண்ண வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு அந்தப் பகுதியே ஒளிரும்படி செய்யப்பட்டிருந்தது.    

CM Stalin flower tributes to former CM leader Anna in Chennai, Anna road. ministers, mayor Priya also attended.
அண்ணா 116ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் மரியாதை. உடன் அமைச்சர்கள், மேயர் பிரியா.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram