செப்.12வரை முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில்!

CM M.K. Stalin
மு.க.ஸ்டாலின்
Published on: 

நாளை ஆகஸ்ட்27ஆம் தேதி சென்னையிலிருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின். 

அரசுமுறைப் பயணமான இதில், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதே நோக்கம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் 17 நாள்கள் தங்கியிருக்கும் அவர், பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். 

நாளைமறுநாள் 28ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்கிறார். 

31ஆம் தேதி அன்று புலம்பெயர் தமிழர்களுடன் முதலமைச்சரின் கலந்துரையாடல் நடைபெறும். 

இடையே, பல தொழில் நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திப்பார். 

செப்.2ஆம் தேதி அங்கிருந்து சிகாகோவுக்குச் செல்லும் அவர், 12ஆம் தேதிவரை தமிழர்களுடன் உரையாடல், முதலீட்டாளர் சந்திப்பு என முதலமைச்சரின் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com