கரூர்- அரசு வேலைவாய்ப்பை நிறுத்திவைக்க வேண்டும்- பெ.சண்முகம்

 சிபிஐஎம் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர்
சிபிஐஎம் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர்
Published on

கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேருக்கு அரசு வேலை தரும் முடிவை நிறுத்திவைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:  

”தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஏற்கெனவே கரூர் சென்றபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்போவதாகத் தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.

த.வெ.க. பிரச்சாரத்தின்போது இறந்தவர்கள் என்பதால், த.வெ.க. அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன்வருகிறது.

மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்துப் போகச் செய்யும்.

சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது. எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்.” என்று சண்முகம் வலியுறுத்தியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com