பா.ஜ.க.+ தி.மு.க.+ அ.தி.மு.க. ... கொள்கைப் புடலங்காய்- முரசொலிக்கு பதிலடி!

புடலங்காய் விமர்சனம்
புடலங்காய் விமர்சனம்
Published on

த.வெ.க. ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்ததை முன்னிட்டு தி.மு.க. அதைக் கடுமையாகவே அணுகிவருகிறது. உதயநிதி முதல் நேற்று கட்சியில் சேர்ந்த இளைஞர்வரை மார்க்சிஸ்ட் கட்சியின் மீது வசைமாறி பொழிந்தபடி இருக்கிறார்கள். 

இந்த நிலையில், தீக்கதிர் நாளேட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் த.வெ.க. ஆதரவு பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டார். 

அதற்குப் பதிலடியாக, தி.மு.க.வின் முரசொலி நாளேட்டில் அதன் தலையங்க ஆசிரியர் ப.திருமாவேலன் இன்று இரண்டாவது நாளாக தொடர் கட்டுரையை எழுதிவருகிறார். அதில், த.வெ.க.வுக்கு ஆதரவு தருவதில் ஒரு கொள்கைப் புடலங்காயும் இல்லை என்கிறபடி குறிப்பிடப்பட்டிருந்தது.  

அதைத் தொடர்ந்து, சிபிஎம் கட்சியின் முகநூல் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள பதிவில், பா.ஜ.க.வும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சேர்ந்த கூட்டணி புடலங்காய் என படம் போட்டு விமர்சனமாக பதிலடி தரப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே, விஜய் ஆட்சி அமைப்பதற்கு முன்னர், எடப்பாடி தலைமையில் ஆட்சியமைக்க தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கைகோத்தன என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், தி.மு.க. தரப்பில் மட்டும் இதை மறுத்தபடி உள்ளனர். 

கம்யூனிஸ்ட் கட்சிகளும் தெளிவில்லாமல் இதைப் பற்றி போகிறபோக்கில் பேசியபடி இருந்தனர். 

இந்தப் பின்னணியில், இந்த புடலங்காய் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com