ஜெ.ஆட்சியிலும் ஜெம் வீரமணி பாலியல் மோசடி- விரிவான விசாரணைக்கு பெ.சண்முகம் கோரிக்கை

பெ. சண்முகம்
பெ. சண்முகம்
Published on

ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு ஆட்சிகளிலும் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டு முறையாக விசாரணை நடைபெறவில்லை என்றும் இதில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

சிறுமிகள் பாலியல் வதை வழக்கில் கம்யூனிஸ்ட்டுகளின் நிலை என்ன என அமைச்சர் இராஜ்மோகன் கேட்டதற்கு, சென்னையில் சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில் இதைத் தெரிவித்தார்.

”அனைத்து புகார்களையும் விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இந்தக் குற்றத்தை மூடிமறைக்க உதவிய காவல்துறை அதிகாரிகள், அவர்களுக்கு அழுத்தம் கொடுத்த அன்றைய ஆட்சியாளர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்பட்டு அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று பெ.சண்முகம் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com