அண்ணாமலை 2501- சண்முகம் கலாய்!

அண்ணாமலை 2501- சண்முகம் கலாய்!
Published on

பா.ஜ.க. முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று புதிய இயக்கத்தைத் தொடங்கியதாக அறிவித்தார். அதில் மணிக்கு ஒரு இலட்சம் பேர் வீதம் மாலை 5 மணிக்குள் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்திருந்தனர். 

முதலில் பொது இயக்கமாகவும் பின்னர் கட்சியாகவும் மாற்றப்படும் என்று அவர் கூறினார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பிறகே பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அண்ணாமலை கூறினார். 

அவருடைய புதிய கட்சிக்கு பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில்,

“ பெயர் மாற்றம், தமிழகத்தில் பா.ஜ.க-வின் புதிய உத்தி!

ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான்.

பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி - அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை.

ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே, அண்ணாமலை போடுவது “மாரீச மான் வேடம்” என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com