முதியோர் ஓய்வூதியம் - மூத்த குடிமக்கள் அவதி : பெ.சண்முகம்

P.Shanmugam, State secretary, CPI(M)
பெ.சண்முகம், சிபிஎம் மாநிலச் செயலாளர்
Published on: 

முதியோர் ஓய்வூதியம் பெற வங்கிக் கணக்கோடு ஆதார் இணைப்பு நிபந்தனையால் மூத்த குடிமக்கள் பெரும் அவதியடைவதாகவும் நிபந்தனையைக் கைவிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

” முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்துவதால் பெரும் அவதிகளுக்கு ஆளாகி இருப்பதாக மூத்த குடிமக்கள் பலர் தெரிவித்துள்ளார்கள்.

ஆதார் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள், பெயர்களில் உள்ள வேறுபாடுகள் உட்பட்ட பிரச்னைகளால் முதியோர் ஓய்வூதியம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு தடைபட்டிருக்கிறது என்றும் முதியோர் ஓய்வூதியம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படாததால் மூத்த குடிமக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் பெரும் எண்ணிக்கையில் வந்து முறையிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான வெயில் சுட்டெரிக்கும் வேளையில், இத்தகைய அலைச்சல் உடல்ரீதியாகவும் அவர்களை பாதிக்கக்கூடியது. ஆதார் மையங்களுக்கு, வங்கிகளுக்கு உடன் அழைத்துச்செல்ல உதவி இல்லாதவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

இந்த திடீர் அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு மன உளைச்சலையும் அலைச்சலையும் ஏற்படுத்தி இருப்பதை கருத்தில்கொண்டு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு, வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படுவது என்பதைக் கட்டாயம் ஆக்கக்கூடாது.” என்று பெ.சண்முகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com