மீண்டும் ஊழல் தடுப்புப் பதவிக்கு வந்த டேவிட்சன்!

டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்
டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்
Published on

தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் பணிமாற்றம் செய்யப்பட்ட டேவிட்சன் தேவாசீர்வாதம் மீண்டும் பழைய பதவிக்கே வந்துள்ளார். 

காவல்துறையின் ஊழல் தடுப்புத் துறை இயக்குநராக இருந்த அவரை, தேர்தலை முன்னிட்டு கடந்த 8ஆம் தேதி தேர்தல் ஆணையம் வலியுறுத்தலால், மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பினார். குறிப்பாக, டேவிட்சனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட சந்தீப் மிட்டல் மீது ஊழல் புகார் உள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 

அதைத் தொடர்ந்து, மாற்றப்பட்ட இரு பதவிகளில் ஊழல் தடுப்புப் பதவியில் சந்தீப் மிட்டல் தொடர மாட்டார் என்றும் ஆயுதப்படையின் டிஜிபியாகத் தொடர்வார் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

டேவிட்சன் தேவாசீர்வாதமே ஊழல் தடுப்புத் துறை இயக்குநராகத் தொடர்வார் என்பதை ஆணையம் தெரிவித்துள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com