இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த தி.மு.க.!

DMK by - election candidates
இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள்
Published on

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களின் விவரத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான முடிவை எடுக்க, இன்று சென்னையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் நிறைவடைந்த பிறகு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை விவரம்:

"வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் திரு. ஐ.பரந்தாமன், பி.ஏ.. பி.எல். (தி.மு.க.சட்டத்துறை இணைச் செயலாளர்) அவர்களும்;

தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் திருமதி. எஸ். சுகன்யா, எம்.ஏ., பி.எல்.., அவர்களும் கழக வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள்." என்று தி.மு.க. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com