காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் பட்டியலை அறிவாலயத்தில் ஊடகத்தினரிடம் காண்பிக்கும் செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் பட்டியலை அறிவாலயத்தில் ஊடகத்தினரிடம் காண்பிக்கும் செல்வப்பெருந்தகை

காங்கிரசுக்கான 9 தொகுதிகள் என்னென்ன?- தி.மு.க.வுடன் உடன்பாடு ஆனது!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிகள் தொடர்பாக இன்று உடன்பாடு கையெழுத்தானது.

தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் சற்றுமுன்னர், மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இதைத் தெரிவித்தார்.

இதன்படி,

திருவள்ளூர்(தனி),

கடலூர்,

மயிலாடுதுறை,

சிவகங்கை,

திருநெல்வேலி,

கிருஷ்ணகிரி,

கரூர்,

விருதுநகர்,

கன்னியாகுமரி,

புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

முன்னதாக, கடந்த 9ஆம் தேதியன்று இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டு உடன்பாடு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com