செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தலைவர்
செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தலைவர்படம்: நன்றி- ஆர்.செந்தில்குமார்

தி.மு.க. – காங்கிரஸ் உறவில் சிக்கலா? – செல்வப்பெருந்தகை விளக்கம்!

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான விவகாரத்தில் ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தி.மு.க. – காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“கட்சியின் கட்டமைப்பு, தேர்தல் உத்திகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்துக்கு டெல்லி சென்றிருந்தேன். இது ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வு. கலைஞர் நினைவிட திறப்பு விழாவை காங்கிரஸ் புறக்கணித்தாக தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. தவறான செய்தியை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி. கூட்டணி தொடர்பாக எங்கள் கட்சியின் தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கே.வி. தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். ராகுல் காந்தியும் – முதல்வர் ஸ்டாலினும் உடன்பிறவா சகோதரர்கள் மாதிரி உள்ளனர். அதை சீர்குலைக்க வேண்டாம். கூட்டணி நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பை இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிப்போம்.” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com