தமிழ் நாடு
விருது முன்னே, மாற்றம் பின்னே... தூத்துக்குடி ஆட்சியராக இளம்பகவத்!
தமிழ்நாட்டு அரசின் 50ஆவது தலைமைச்செயலாளராக என். முருகானந்தம் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சர் அலுவலகத்திலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தூக்குக்குடி மாவட்ட ஆட்சியராக இருக்கும் இலட்சுமிபதி, முதலமைச்சரின் இணைச்செயலாளர் எனும் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவி புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஓராண்டுவரை இது நீட்டிக்கப்படும். தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் என்று புதிய தலைமைச்செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேசமயம், பொதுநூலகத் துறை இயக்குநராக இருக்கும் இளம்பகவத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் தேதி சுதந்திர நாள் விழாவன்று தமிழக அரசின் நல் ஆளுமை விருது முதலமைச்சர் ஸ்டாலினால் இவருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.