
தேர்தல் நாளன்றும் அதையொட்டியும் ஊடகத்தில் விளம்பரங்கள் செய்யப்படுவதற்கான விதிகள் குறித்து தேர்தல் ஆணையம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
”தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக பாதுகாப்பு படைகளின் பணியமர்த்தல் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே மத்திய ஆயுத பாதுகாப்புப் படையின் 50 கம்பெனிகளை 10.03.2026 அன்று அனுப்பியுள்ளது. தற்போது, மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதலாக மத்திய ஆயுத பாதுகாப்புப் படையின் 250 கம்பெனிகளை பாதுகாப்பான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்காக நியமித்துள்ளது. அந்த கம்பெனிகள் 06.04.2026 மற்றும் 13.04.2026 அன்று தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவுள்ளது.
அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கைபேசி செயலி பயன்படுத்துதல் பற்றிய பயிற்சி இந்திய தேர்தல் ஆணையம் மூலம் 19.03.2026 அன்று காணொலி வழியாக வழங்கப்பட்டது. இந்த கைபேசி செயலியின் மூலம், வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் வாக்குப்பதிவு நிலவரங்களை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பதிவு செய்வதற்கான வசதிகள் உள்ளது.
தேர்தல் நாளன்றும் மற்றும் தேர்தல் நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவும், எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ அல்லது வேறு எந்த அமைப்போ அல்லது நபரோ, மாநில/மாவட்ட அளவிலான ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (MCMC) உள்ளடக்கத்தை முன்-சான்றொப்பம் (Pre-certified) பெறாமல், அச்சு ஊடகங்களில் (Print Media) எந்தவொரு அரசியல் விளம்பரத்தையும் வெளியிடக்கூடாது என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தில் புழக்கத்தில் உள்ள அச்சு ஊடகங்களில் வெளியிடப்படும் அரசியல் விளம்பரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும்:
தடை செய்யப்பட்ட நாட்கள் (தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு முந்தைய நாள்)
22.04.2026 & 23.04.2026” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.