ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்!

ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன்
Published on

காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 76.

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் திணறல் ஏற்பட்டதால் கடந்த சில நாள்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தநிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சென்று நலம் விசாரித்து வந்தார். அதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர்களும் நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில், ஈவிகேஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com