ஜோவிகா - பவா செல்லதுரை
ஜோவிகா - பவா செல்லதுரை

கல்வி முக்கியமா? இல்லையா?: பிக் பாஸ் தொடங்கிவைத்த விவாதம்!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ”பிடித்திருந்தால் படியுங்கள்”, ”கல்வி என்பது ஒரு மண்ணுமில்லை” என்று கல்வி குறித்து ஜோவிகாவும் எழுத்தாளர் பவா செல்லதுரையும் கூறியது விவாதத்தைக் கிளப்பியது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் -7 பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் நடந்த பிக்பாஸில், விசித்ரா ஜோவிகாவை பார்த்து,”எங்கே தமிழ் எழுதிக்காட்டு பார்ப்போம்” என்று சாட, ”நான் தமிழ் படிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சம் எழுத தெரியும் அவ்வளவுதான். எனக்கு படிப்பு வரவில்லை என்றுதானே அதனை நிப்பாட்டினேன். நான் கஷ்டப்பட்டேன். படித்துதான் வாழவேண்டும் என்று எதுவுமே கிடையாது. எதையும் கத்துக்கிட்டு செய்யலாம். உன்னால் படிக்க முடிந்தால் தயவு செய்து படி. உனக்கு எது வருகிறதோ, அதை செய்” என்று ஆவேசமாக பேசினார். இதைப்பார்த்த சகபோட்டியாளர்கள் ஜோவிகாவிற்கு ஆதரவாக கைதட்டினர்.

அப்போது எழுத்தாளர் பவா செல்லத்துரை, ”கல்வி என்பது ஒரு மண்ணும் கிடையாதுங்க” என்று கூறிக் கொண்டே, ஜோவிகாவை ஊக்கப்படுத்துவது போல கைகொடுக்க, ஜோவிகா வேண்டாம் என்று தவிர்த்துவிட்டார்.

மேலும், ”சுரேஷ் நீங்கதான் சொன்னீங்க. பத்தாவது படிச்சிருக்கேனு. இங்கிருக்கிறவங்களை விட உங்களுக்குத்தான் புகழ் அதிகம். எப்படி வந்தது? உங்க கல்வியாலா?. ஏன், எம்.பில். பி.எச்டிக்கு வர்ல” என்று பவா செல்லாதுரை பேசியிருந்தார்.

உடனே சமூக ஊடகத்தினர், சீமான், நீயா நானா கோபிநாத் போன்றவர்கள் படிப்பு குறித்துப் பேசிய வீடியோக்களை எடுத்துப் போட்டு விவாதத்தைச் சூடேற்றினர்.

தன் மகள் பேசியது குறித்து விளக்கம் அளித்த வனிதா விஜயகுமார், படிப்புக்கு எதிராக ஜோவிகா எங்கேயும் பேசவில்லை என்றும் படிக்க முடியாதவர்களை டார்ச்சர் பண்ண வேண்டாம் என்று கூறியிருந்தார்.

மேலும், ஜோவிகா எப்படிப்பட்ட மாணவி, அவர் ஏன் பள்ளியை விட்டு நின்றார் என்று அவரது ஆசிரியை பதிவிட்டுள்ள போஸ்ட் ஒன்று சமூக ஊடகத்தில் வைரலானது. அதில், “நான் கூட இது மாறி abuse கடந்து வந்தவாதான். I was slut shamed by one of my teacher and my mom at my 6th grade (11 years old) முன்னாடி முடிவிட்டு தலைசீவிட்டு வந்தேன்னு... ஆனா உண்மையா எனக்கு தலைசீவ தெரியாம சீவிட்டு போய் திட்டு வாங்கினேன். அப்போ எனக்கு எதிர்த்து பேச தெரியல.

இந்த மாதிரி நிறைய குழைந்தகள் ஒவ்வொரு நாளும் face பன்னிட்டுதான் இருகாங்க. இப்போ 18 வயசுல ஸ்கூல் முடிக்காத ஜோவிகா பேசுறத கேட்டு எல்லோரும் கோவப்படுறீங்க. ஆனா, எனக்கு அவங்க அம்மா, பிக் பாஸூக்கு போனப்போ, ஸ்கூல்ல இந்த கொடூரமான உலகத்த face பண்ணணு தெரியாம இருந்த ஜோவிகாவை தெரியும்.

பட்டபடிப்பு படிச்சுட்டு already hardships face பண்ற 13 வயசு பொண்ண Handle பண்ற விதமா இது? அவ படிக்கவும் நிறைய கஷ்டபட்டிருக்கா. அவ படிக்கலன்னு சாத்தியமா சொல்ல முடியாது. என்னோட கிளாஸ்ல அவ்ளோ துரு துருன்னு இருப்பா. கிளாஸ்க்கு முதல்ல ஓடி வர பொண்ணு அவதான்(அதுக்கும் எப்போபாரு ஓடிட்டே கிடக்கணு திட்டு வாங்கிருக்கா). நல்லா வரைவா, டிசைன் பண்ணுவா, அவளை நம்பி ஒரு பொறுப்பைக் குடுத்தா, சரியா செய்வா. ஆளுமை தன்மை (leadership qualities) நிறைய இருக்கு அவகிட்” என்று ஜோவிகாவை பற்றி அவரின் டீச்சர் ஒருவர் எழுதியிருந்த பதிவின் சுருக்கம் இது.

அதேபோல், பவா செல்லதுரையை பலரும் ட்ரோல் செய்து எழுதுவதையும் பார்க்க முடிகிறது.

“ஒரு சாதாரண கூமுட்டை கூட சொல்லிடும். 1950-களுக்கு முன்பு தமிழ்நாட்டில் எத்தனைபேர் படிச்சு பி.எச்.டி வாங்கினாங்கன்னு. அன்னைக்கெல்லாம் பி.எச்.டி என்று ஒரு படிப்பே தமிழ்நாட்டில் இல்லை. லண்டன் சென்றுதான் உயர்கல்வி படிக்கவேண்டும். அம்பேத்கர் லண்டனில் பி.எச்.டி படித்தார். எண்பதுகளுக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் எண்ணற்ற பொறியியல் கல்லூரிகள் வந்து நடுத்தர வர்க்க தமிழர்கள் பலர் படித்து துபாய், அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றார்கள். தவிர இவர் சொன்ன இரண்டு பேரில் ஒருத்தர் ஐயர். இன்னொருத்தர் திருநெல்வேலி பிள்ளைமார். சீனிவாச ஐய்யங்கார் பிள்ளை படிக்காட்டி ஒன்றும் குடிமுழுகிடாது. அவர் எப்படியும் ஏதாவது ஒரு துறையில் முன்னேறி வந்துடலாம். முனியாண்டி பிள்ளைகளுக்குத்தான் கல்வி தேவை. தான் ஒரு மொண்ணை அங்கிள் என்பதை திரும்ப திரும்ப நிரூபித்து வருகிறார் பவா.” என்று எழுத்தாளர் விநாயக முருகன் பவாவை விமர்சித்து எழுதியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com