ஆக.4இல் எடப்பாடி பழனிசாமி ஆஜராக சபாநாயகர் உத்தரவு!

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்
சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்
Published on

கட்சிதாவிய அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் விசாரணை நடத்திவருகிறார்.

இதில், மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகிய அந்த நான்கு எம்.எல்.ஏ.களிடமும் அவர் விசாரணை நடத்திவிட்டார்.

அதையடுத்து, அவர்கள் மீது புகார் அளித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நாளை நேரம் தரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று அவரை வரும் 4ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com