சட்டம் ஒழுங்கு டிஜிபி மாற்றம்- தேர்தல் ஆணையம் அதிரடி

டிஜிபி அலுவலகம்
டிஜிபி அலுவலகம்
Published on

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பில் இருந்துவரும் வெங்கட்ராமனை தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியுள்ளது. அவருக்குப் பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். 

மாநிலத்தின் 32ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பணியாற்றினார். அவரின் ஓய்வுக்குப் பிறகு நிரந்தர டிஜிபியாக யாரும் நியமிக்கப்படவில்லை. 

பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் சரியல்ல என அதிகாரிகள் தரப்பிலும் அரசியல் கட்சிகள் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

ஆனாலும் கடந்த ஆகஸ்ட் முதல் வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாகப் பணியாற்றிவருகிறார். 

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அதிரடியாக அவரை மாற்றியுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com