உச்ச நீதிமன்றத்தில் மதுரை நந்தினி
உச்ச நீதிமன்றத்தில் மதுரை நந்தினி

வாக்கு எந்திரம் வேண்டாம்- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மதுரை நந்தினி மனு!

தேர்தல்களில் வாக்குப்பதிவு எந்திரங்களைப் பயன்படுத்தத் தடைவிதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மதுரை சட்டப்பட்டதாரி நந்தினி மனு அளித்துள்ளார். 

இன்று காலை நந்தினியும் அவரி தந்தை ஆனந்தனும் புதுதில்லியில் உள்ள தலைமை நீதிபதியின் வீட்டுக்குச் சென்று மனுவைக் கொடுத்ததாகவும் அவரின் உதவியாளர் வாங்கிக்கொண்டு நீதிபதியிடம் சேர்த்துவிடுவதாகக் கூறியதாகவும் அதற்கு அத்தாட்சி கேட்டதற்கு அப்படியொரு நடைமுறை இல்லையென்றும் தலைமை நீதிபதி அலுவலகத்தை அணுகுமாறு அவர்கள் கூறியதாகவும் நந்தினியின் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

பின்னர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்துக்குச் சென்று வாக்குப்பதிவு எந்திரத்துக்குத் தடை விதிக்கவும் புல்வாமா தாக்குதல் பற்றி விசாரிக்கவும் கோரி மனு கொடுத்ததாக  நந்தினி தரப்பினர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளனர்.  

மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு போன்ற கொள்கைகளை வலியுறுத்தி சட்டக் கல்லூரி மாணவராக இருந்ததுமுதல் அகிம்சை முறையில் போராட்டங்களை நடத்தி வருபவர், நந்தினி என்பது குறிப்பிடத்தக்கது.   

logo
Andhimazhai
www.andhimazhai.com