தொடரும் கந்துவட்டிக் கொடுமை... ரயில்முன் பாய்ந்து தாய், மகன் தற்கொலை!

மாய்த்துக்கொண்ட தாய், மகன்
மாய்த்துக்கொண்ட தாய், மகன்
Published on: 

தமிழகத்தையே ஒரு காலத்தில் கலக்கியெடுத்த கந்துவட்டிக் கொடுமை மீண்டும் அரங்கேறியுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர், தன் மகனுடன் இரயில்வண்டி முன்பாகப் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டுள்ளார். 

சூலக்கரையில் மணிகண்டன், தனலட்சுமி ஆகிய இருவர் கந்துவட்டி வாங்கிக்கொண்டு கொடுமை செய்ததாக உயிரிழந்த பாண்டிச்செல்வி கடிதம் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளார். 

தன் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு வருத்தமும் மன்னிப்பும் கேட்டும் அவர் குறிப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

தமிழ்நாட்டில் கந்துவட்டியைத் தடுக்கும்வகையில் கடந்த 2003ஆம் ஆண்டில் தனிச் சட்டமே இயற்றப்பட்டது. அதையடுத்து கந்துவட்டி மரணங்கள் குறைந்திருந்தும் அவ்வப்போது இப்படியான துயர சம்பவங்கள் தொடரத்தான் செய்கின்றன.