
சட்டப்பேரவைத் தேர்தலில் த.வெ.க.வுக்கு 41 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று முன்னாள் டி.ஜி.பி. இரவி நடத்திய வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கேட்பு தெரிவிக்கிறது.
ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் 10 பேர் வீதம் மாநிலம் முழுவதும் 2,340 முன்னாள் காவல்துறை அதிகாரிகள் இந்த சர்வே நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 2,34,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது என்றும் அவர்களில் 41 சதவீதம் பேர் த.வெ.க.வுக்கு வாக்களித்ததாகக் கூறியதாகவும் இரவி தெரிவித்துள்ளார்.
த.வெ.க.வுக்கு 121 தொகுதிகள் கிடைக்கும் என்றும் மீதமுள்ளவற்றில் இரண்டு கட்சிகளுக்கும் இழுபறியாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
”இது அனைத்தும் சர்வே செய்து வந்த தனிப்பட்ட கருத்து கணிப்பு. கமெண்ட் பகுதியில் யாரும் குஜிலிமஸ்து போட்டுக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.” என்றும் இரவி தன் இன்ஸ்டாகிராம் பதிவில் கூடுதல் கருத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்தக் கருத்துக்கு மட்டும் இப்போதைய நிலவரப்படி, 8,488 பேர் விருப்பக்குறி இட்டுள்ளனர். 276 பேர் பதில் கருத்தைக் கூறியிருக்கின்றனர்.
மொத்தப் பதிவுக்கும் 23 மணி நேரத்தில் 56,100 பேர் விருப்பமிட்டுள்ளனர்.
இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, குஜிலிமஸ்துவுக்கான நல்ல விளக்கத்தை இரவி ஐபிஎஸ் அளிக்கவில்லை!