சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருதை வழங்கினார் முதல்வர் விஜய்!

சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருதை வழங்கினார் முதல்வர் விஜய்!
Published on

உயிர்ம வேளாண்மையில் சிறப்பாகச் செயல்படும் மூன்று உழவர்களுக்கு 2025-2026ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதை முதலமைச்சர் விஜய் இன்று வழங்கினார்.

உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையிலும், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2025-2026ஆம் ஆண்டில் உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செ.நல்லசிவம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அ. சுப்பிரமணியன், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சாதனா ஆகியோருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வார் விருதுகளை முதலமைச்சர் விஜய் தlலைமைச்செயலகத்தில் இன்று வழங்கிச் சிறப்பித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com