சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஒப்புகைப் படிவத்தை வழங்கும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை
சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஒப்புகைப் படிவத்தை வழங்கும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை

இன்று மாலைக்குள் மீதமுள்ள காங். வேட்பாளர்கள் அறிவிப்பு- செல்வப்பெருந்தகை!

தமிழக காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடக்கூடிய 9 தொகுதிகளில் ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது. 

கூட்டணியின் தலைவரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், பிரச்சாரத்தைத்தொடங்கி மூன்று நாள்கள் பிரச்சாரத்தையும் முடித்துவிட்டார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாததால், திருவாரூர் கூட்டத்தில் மயிலாடுதுறை வேட்பாளரை அறிமுகம் செய்ய இயலாமல் போனது. 

கூட்டணிக்குள்ளும் காங்கிரசுக்குள்ளும் இதுகுறித்து அதிருப்தி நிலவுகிறது. 

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சற்றுமுன்னர் ஊடகத்தினரிடம் பேசுகையில், இன்று மாலைக்குள் நெல்லை, மயிலாடுதுறை தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரும் அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com