‘எதுவுமோ செய்யாத ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்...!’

ஒபாமா - டிரம்ப்
ஒபாமா - டிரம்ப்
Published on

ஒன்றுமே செய்யாத ஒபாமாவுக்கு நோபல் பரிசு கிடைத்ததாக கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், காசாவில் அமைதியை ஏற்படுத்தியதில் தனக்குள்ள பங்கையும் அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.

இன்று 2025ம் ஆண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது. விருதுக்காக மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.

நார்வே நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டு உள்ள 5 பேர் கொண்ட குழுவானது பரிசீலனையில் உள்ளோரில் ஒருவரை விருதுக்கு உரியவராக தேர்வு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். நோபல் பரிசு பெறுவோருக்கு பதக்கத்துடன், ரூ.10 கோடி பரிசுத்தொகையும் கிடைக்கும்.

எப்படியும் எனக்குத்தான் நோபல் பரிசு என்று கூறிக்கொண்டே இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப். முன்னாள் அதிபர் ஒபாமாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: எதையும் செய்யாமலேயே ஒபாமாவுக்கு நோபல் பரிசு கிடைத்தது. நம் நாட்டை அழித்ததை தவிரை அவர் வேறு எதையும் செய்யவில்லை. அதற்காகவே அவரை தேர்ந்தெடுத்து, விருது கொடுத்தார்கள். அவர் ஒரு சிறந்த அதிபராக இருந்தது கிடையாது.

நான் 8 போர்களை நிறுத்தி இருக்கிறேன். இதற்கு முன்பு இப்படி நடந்ததே இல்லை.” இவ்வாறு டிரம்ப் பேசினார்.

ஓபாமாவுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com