தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Published on

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மத்திய அமைச்சர்கள் 3 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன.

இதில் பாஜகவைப் பொருத்தவரை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், மேலும் சில கட்சிகளை கூட்டணியில் இணைக்க முயற்சித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மத்திய அமைச்சர்கள் 3 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இணை பொறுப்பாளர்களாக சட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக பைஜெய்ந்த் பாண்டா நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com