நாளை மாலை கோவையில் பிரதமர் மோடி பிரச்சாரம்!

பிரதமர் மோடி பிரச்சாரம்
பிரதமர் மோடி பிரச்சாரம்
Published on

பிரதமர் மோடி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக நாளை மாலை கோவைக்கு வருகிறார். 

கோவை கொடீசியா வளாகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சாரம் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நாளை மாலை 6 மணி முதல் 7 மணிவரை அவரின் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு கேட்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com