தமிழ் நாடு
பிரபல யூட்டியூபரும் தற்போதைய அ.தி.மு.க. ஆதரவாளருமான சவுக்கு சங்கர் இன்று கைது செய்யப்பட்டார்.
கோவை சைபர் கிரைம் போலீசால் தேனியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் அங்கிருந்து காவல்துறையின் வாகனம் மூலம் அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்றும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.
அப்படி அழைத்துச் செல்லப்பட்டபோது தாராபுரம் அருகில் அந்த வாகனம் விபத்துக்கு உள்ளானதாகவும் சங்கர் உட்பட சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருடைய கைது குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
முன்னதாக, சவுக்கு ஊடகத்தின் மீது ஆட்சியாளர்கள் அடக்குமுறை செலுத்துவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.